Wednesday, May 29, 2019

பட்டு விட்டுப்போன மனம்

உணர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போனால்
மரத்து போனதாகிவிடும் மனம்
மரம் கூட வெட்டுபட்டால்
பட்டு போய்விடும்
மனம் வெட்டுப்பட்டால்
பட்டு போகாமல்
விட்டு கொடுத்து போ என்பது தான்
பெண்மையின் உயர் குணம் 

ஆனால்  மரத்து போன பெண் மனதிற்கு
பரிசானாலும் பழியானாலும் பாசமானாலும்
வித்யாசம் இல்லை !!!
நீண்ட வருடங்களுக்கு பின் ஒரு கவிதை -- வித்யா